
பட்டப்பகலில் சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைத்து பாலியல் தொல்லை.. சென்னையில் பேரதிர்ச்சி.!
சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மாணவியை வாகனத்தில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த சிகிரெட்டாலும் மாணவிக்கு சூடுவைத்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு வந்து நடந்ததை கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வசியரினை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement