இல்லத்தரசிகளுக்கு இன்பச்செய்தி.. சரசரவென குறைந்தது தங்கத்தின் விலை..! சீக்கிரம் வந்து அள்ளிட்டு போங்க..!! 



Chennai Gold rate today

சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சென்னையில் குறைந்துள்ளது. இது குறித்த தகவலை தற்போது காண்போம்.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4626-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4974 என்றும், ஒரு சவரன் ரூ.39,792-க்கும் விற்பனையாகிறது. அத்துடன் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.61.60 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61,600-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.