பிறந்த பிஞ்சை மருத்துவமனையில் விட்டுவிட்டு, தாய் இரயிலில் அடிபட்டு சாவு - சென்னையில் பேரதிர்ச்சி துயரம்.!

பிறந்த பிஞ்சை மருத்துவமனையில் விட்டுவிட்டு, தாய் இரயிலில் அடிபட்டு சாவு - சென்னையில் பேரதிர்ச்சி துயரம்.!


Chennai Egmore Woman Died Hit by Train

 

அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற தாய், பிறந்து ஒருவாரம் ஆன குழந்தையை தவிக்கவிட்டு இரயிலில் அடிபட்டு மரணித்தார்.

சென்னையில் எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் அனுமதியான 23 வயதாகும் சந்தியா என்ற பெண்ணுக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. கடந்த ஒரு வாரமாகவே இருவரும் மருத்துவமனையில், மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சந்தியா மட்டும் அங்கிருந்து தப்பி சென்றார். அவர் திருவள்ளூர் மார்க்க இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

இரயில் தண்டவாளத்தில் பெண் இரயிலில் அடிபட்டு இறந்ததாக கிடைத்த தகவலின் பேரில், இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து சந்தியா மாயமானது குறித்த தகவலை அறிந்த மருத்துவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

விசாரணையில், சந்தியா இரயிலில் அடிபட்டு உயிரிழந்தது அம்பலமாகவே, அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.