வாட்சப் குழு மூலமாக போதை மாத்திரை விற்ற காதல் ஜோடி உட்பட கும்பல் கைது‌.. விசாரணையில் பரபரப்பு தகவல்கள்..!!

வாட்சப் குழு மூலமாக போதை மாத்திரை விற்ற காதல் ஜோடி உட்பட கும்பல் கைது‌.. விசாரணையில் பரபரப்பு தகவல்கள்..!!


chennai-drug-sales-team-arrested-by-police

சென்னையில் உள்ள இளம் தலைமுறையினர் இடையே போதைப் பொருள் உபயோகம் என்பது அதிகரித்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் வலிநிவாரணி மாத்திரைகளை போதைப்பொருளாக உபயோகம் செய்து வருகின்றனர். வாட்ஸ் அப் குழு மூலமாக கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் பெண், அவரின் காதலர் என ஒரு கும்பலே சிக்கியுள்ள நிலையில், விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த கும்பல் தொடர்பான வாட்ஸ்அப் விவரங்களை சேகரித்து உடனடியாக கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, வாடிக்கையாளர் போலவே ஒரு மாணவரை ஏற்பாடு செய்து இந்த கும்பலை கைது செய்துள்ளது. 

கோடம்பாக்கத்தில் உள்ள டிரஸ்டிபுரம் பகுதியில் இந்த கும்பல் செயல்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட 2 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்து வலிநிவாரணி மாத்திரைகளை கைப்பற்றினர்‌. அதனை அவர்கள் போதைக்காக உபயோகம் செய்தும் அம்பலமானது‌. விசாரணையில்,  கே.கே நகரை சார்ந்த கிஷோர் (வயது 23), அண்ணா நகரைச் சார்ந்த கிஷோர் குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர்களின் வாக்குமூலத்தின் பேரில் கொத்தவால்சாவடி பூங்குன்றன் (வயது 26), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 22), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கோகுலன் (வயது 24), பூந்தமல்லியை சேர்ந்த ராஜலட்சுமி (வயது 23) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் நடந்த விசாரணையின் போது ராஜலட்சுமியும், முத்துபாண்டியும் காதலர்கள் என்பது அம்பலமானது. இவர்களிடமிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், கருக்கலைப்பு மாத்திரைகளை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.