பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எண்ணெய்; அனுமதிக்காக கத்திற்கும் சென்னை மாநகராட்சி.. சென்னை மாநகர ஆணையர் பேட்டி.!

பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எண்ணெய்; அனுமதிக்காக கத்திற்கும் சென்னை மாநகராட்சி.. சென்னை மாநகர ஆணையர் பேட்டி.!



chennai-corporation-plan-to-oil-from-plastic-waste

 

நம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சுகந்த்திப் சிங் பேடி கூறியிருக்கிறார்.

சுற்றுச்சூழலை கெடுத்து பாதிப்பை ஏற்படுத்தும் கார்பனின் அளவை சுழியத்திற்கு கொண்டு செல்ல கார்பன் ஜீரோ (Carbon Zero) சேலஞ்ச் 2022 என்ற புதிய திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கி உள்ளது. இதில் 30 மாணவர்கள் கொண்ட குழு ஆராய்ச்சி செய்து, அவர்களுக்கு, ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தை ஐஐடி நிறுவனம் சென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக இன்று டிசம்பர் 23 சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.