மெரினாவில் கேக் கொடுத்து காதல்.. சண்டையில் கல்லூரி மாணவர் விபரீதம்.. திரைப்படத்தை மிஞ்சும் காதலில் சோக சம்பவம்.! 

மெரினாவில் கேக் கொடுத்து காதல்.. சண்டையில் கல்லூரி மாணவர் விபரீதம்.. திரைப்படத்தை மிஞ்சும் காதலில் சோக சம்பவம்.! 


Chennai College Student Suicide Love Issue

 

தன் காதலின் மதிப்பே பெரியது என்பதை உணர்த்த காதலன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள அண்ணாநகர், முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவர் மோகன், சனிக்கிழமை தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நொளம்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கினர். மாணவர் மோகன் பயன்படுத்திய செல்போனில் இறுதியாக பேசிய நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசுகையில், அவர் மோகனின் காதலி என்பது உறுதியானது. அவரிடம் இறுதியாக இருவரும் பேசிக்கொண்டது என்ன?. எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

விசாரணையில், பிறந்தநாள் பரிசு வழங்குவது தொடர்பாக மாணவர் காதலிக்காக விபரீத முடிவெடுத்தது அம்பலமானது. அதாவது, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மோகன் தனது பிறந்தநாளை மெரினாவில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது, கடற்கரைக்கு வந்தவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. 

chennai

இவ்வாறாக கல்லூரி மாணவி ஒருவருக்கும் கேக் கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் மீண்டும் சில நாட்கள் கழித்து அதே கடற்கரையில் சந்தித்துக்கொண்டுள்ளனர். எதற்ச்சையாக தாங்கள் சந்தித்துக்கொண்டதை இறைவனின் காதல் செயல் என சிவகார்த்திகேயனின் ரெமோ பட பாணியில் இருவரும் சித்திக்க, செல்போன் எண்ணை பரிமாறி பேசிகொண்டுள்ளனர்.

இந்த நட்பானது பிற்காலத்தில் காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது வியக்கத்தகு பரிசு கொடுத்து மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர். உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

சனிக்கிழமை பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால், காதலிக்கு வாழ்த்த மோகன் தொடர்பு கொண்ட போது இருவருக்குள்ளும் யார் வாங்கிக்கொடுத்த பரிசு மதிப்பு மிகுந்தது என்ற சண்டை எழுந்துள்ளது. வாக்குவாதத்தில் பெண் போனை துண்டித்து இருக்கிறார். எனது காதலின் மதிப்பே பெரியது என்பதை உணர்த்த மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற பதைபதைப்பு தகவல் அம்பலமானது.