மக்களே உஷாரா இருங்க.! இனி சென்னையில் கடும் குளிர் நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



chennai cold season starting

 

தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை மற்றும் இரவு வேலைகள் கடுமையான குளிரானது நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்தது. இந்நிலையில், ஜனவரி மாதம் இரவு நேரத்தில் கடுமையான குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் மழை பெய்யலாம். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

chennai cold season

அதேபோல, தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கையில், "ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் வரை நகரக்கூடும் என்பதால், இரவு நேரத்தில் வெப்பநிலை குறைவாகும், அடுத்த நான்கு நாட்களுக்கு நாம் மழையை எதிர்பார்க்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.