புள்ளிங்கோக்கள் அட்டகாசம்... கத்தி முனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

புள்ளிங்கோக்கள் அட்டகாசம்... கத்தி முனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.!


chennai-boys-thieft-dress-in-perambur

கத்தியைக் காட்டி மிரட்டி, துணிகளை திருடிச்சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜாவித். இவர் எம்.பி.எம் பகுதியில் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது துணிக்கடைக்கு வந்த 4 பேர் திடீரென கத்தியை காட்டி, துணிகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர்.

தொடர்ந்து ஜாவித் பணத்தை தர மறுத்த நிலையில், அவரை கத்தியால் தாக்கி விட்டு துணிகளை மட்டும் திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். பின் இந்த விஷயம் தொடர்பாக ஜாவித் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

chennai

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கலை செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன் கத்தியை காட்டி மிரட்டி, நால்வர் துணிகளை திருடி சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.