சென்னையில் நடந்த ருசீகர சம்பவம்: திருட்டு பைக்கில் உல்லாசப்பயணம்! வீட்டிலிருந்தபடியே பைக்கினை மீட்ட உரிமையாளர்!

சென்னையில் நடந்த ருசீகர சம்பவம்: திருட்டு பைக்கில் உல்லாசப்பயணம்! வீட்டிலிருந்தபடியே பைக்கினை மீட்ட உரிமையாளர்!



chennai bike robbery caught through social media

ஊரடங்கு சமயத்தில் சென்னையில் பைக் திருடர்களை நண்பர்களின் உதவியுடன் உரிமையாளர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை திருமங்கலம், டி.வி நகரைச் சேர்ந்தவ பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 24 ஆம் தேதி தனது விலையுயர்ந்த பைக்கினை வீட்டின் வெளியில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் இருந்துள்ளார். காலையில் வந்து பார்க்கும்போது பைக்கை காணவில்லை. இதனால் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஊரடங்கை முறையாக செயல்படுத்துவதில் போலீசார் கவனம் செலுத்தியதால் பாலசுப்பிரமணியனின் பைக்கினை பற்றி அவர்கள் அக்கறை காட்டவில்லை. இதனால் பாலசுப்பிரமணியன் தாமாகவே பைக்கினை கண்டறியும் முயற்சியில் தன்னுடைய தொலைந்து போன பைக் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். அதனை தொடர்ந்து அவரின் நண்பர்களும் பைக்கினை தேட துவங்கினர்.

chennai

இந்நிலையில் திருமுல்லைவாயலில் இளைஞர்கள் பாலசுப்பிரமணியனின் பைக்கினை ஓட்டி செல்வதை கண்ட அவரது நண்பர் ஒருவர் தகவலை வாட்ஸப்பில் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சில நண்பர்களுடன் திருமுல்லைவாயல் சென்ற பாலசுப்பிரமணியன் அவருடைய பைக்கினை ஓட்டி சென்றவர்களை பின் தொடர்ந்துள்ளார்.

திருமுல்லைவாயல் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற இளைஞர்கள், பைக்கை வெளியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றனர். அந்த வீட்டுக்குள் இன்னும் சில இளைஞர்கள் இருந்தனர். இதையடுத்து பாலசுப்பிரமணியன், திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

chennai

அதனை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டினை சுற்றி வளைத்தனர். ஆனால் இரண்டு நபர்களை தவிர மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வடபழனியைச் சேர்ந்த ரமேஷ் (25), அவரின் நண்பர் குன்றத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வீட்டிற்குள் மேலும் இரண்டு பைக்குகள், நகைகள், லேப்டாப்கள், கத்தி, அரிவாள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு சமயத்திலும் இவர்கள் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலசுப்பிரமணியனின் பைக்கினை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர்.