"அக்காவுக்கு மட்டும் சொத்தில் பங்கு.. எனக்கு இல்லை" - காதலியிடம் வருத்தம் கூறி தற்கொலை செய்த கார் ஓட்டுநர்.!

"அக்காவுக்கு மட்டும் சொத்தில் பங்கு.. எனக்கு இல்லை" - காதலியிடம் வருத்தம் கூறி தற்கொலை செய்த கார் ஓட்டுநர்.!


Chennai Ayanavaram Driver Suicide

 

குடும்ப சொத்தை விவகாரத்தாகி தனியே வசித்து வரும் அக்காவுக்கு 3 தங்கைகள், 1 தம்பி விட்டுக்கொடுத்த நிலையில், கடைக்குட்டி மகன் சொத்தில் பங்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ஓட்டேரி, புதுவாழைமா நகரில் வசித்து வருபவர் முருகானந்தம் (வயது 41). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அயனாவரம் ஆண்டர்சன் சாலை பகுதியில் கணவரை இழந்த பெண் வசித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். முருகானந்தத்திற்கு 3 சகோதரிகள், 1 சகோதரர் இருக்கிறார். இவர்களுக்குடையே குடும்ப சொத்தை விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

கடந்த வாரத்தில் முருகானந்தத்தின் சொத்து வேண்டும் என சகோதர - சகோதரிகள் பிரச்சனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விவகாரத்தாகி வசித்து வரும் பெண்ணுக்கு குடும்பத்தினர் சொத்தை கொடுத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்த முருகானந்தம் தனக்கு சொத்தில் பங்கு கிடைக்கவில்லை என்று கூறி வருத்தமுற்றுள்ளார். மேலும், தனது காதலியின் வீட்டிற்கு மதுபோதையி வந்து புலம்பிவிட்டு உறங்கியவர், நள்ளிரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.