என்னது சென்னையில் ஏலியன்களா?.. முட்டுக்காடு பகுதியில் முகாமிட்டு பறக்கும் தட்டு.!

என்னது சென்னையில் ஏலியன்களா?.. முட்டுக்காடு பகுதியில் முகாமிட்டு பறக்கும் தட்டு.!


chennai alien Issue 

 

சென்னையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் சுற்றுலா என்பது மிகப்பிரபலம் வாய்ந்த ஒன்றாகும். சம்பவத்தன்று முன்னாள் டிஜிபி பிரதாப் பிலிப் தனது மனைவியுடன் அங்கு சென்றுள்ளார். 

அப்போது, வானில் அவர் பார்க்கும்போது வினோத வகையிலான பறக்கும் தட்டுகள் கண்களில் தென்பட்டுள்ளது. இந்த பறக்கும் தட்டுகள் 20 முதல் 25 வினாடி வரை வானில் தென்பட்டு மறைந்துள்ளது. 

இந்நிகழ்வை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர், சென்னையில் ஏலியன் வந்துவிட்டதா? என்ற கேள்வியுடன் விடியோவை பகிர்ந்துள்ளார். 

ஏற்கனவே அமெரிக்க விமானப்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஏலியன்கள் பறக்கும் தட்டு விபத்திற்குள்ளாகி, மனிதர் அல்லாத புதிய உயிரினத்தை அமெரிக்கா ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக குற்றசாட்டை முன்வைத்து இருந்தார். 

அதேபோல், மறைந்த எதிர்கால ஜோதிடர் என்று சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவா இவாங்காவின் குறிப்புப்படியும் ஏலியன்கள் நடமாட்டம் உலகில் இவ்வாண்டு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.