மனைவியை பார்க்க ஏர்போர்டில் கணவன் செய்த பகீர் காரியம்; விசாரணையில் நொறுங்கிப்போன அதிகாரிகள்.. அவ்வுளவு பாசமாப்பு..!chennai-airport-man-miss-used-offence

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் இருந்து ஒருவர் வெளியே செல்ல முயற்சித்த நிலையில், அவரை கவனித்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். 

அப்போது நான் துபாய் செல்வதற்கான விமான டிக்கெட் வைத்திருக்கிறேன் என்று காட்டிய நிலையில், அது அவரது பெயரில் போலியாக தயாரித்து அம்பலமானது. மேலும், பயணிகள் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்து மனைவியை வழியனுப்பிவிட்டு 3 மணி நேரத்திற்கு பிறகு புறப்பாடு பகுதி வழியாகவே வெளியே வந்தபோது சிக்கியுள்ளார். 

விசாரணையில், அவர் சசிகுமார் என்பதும், மனைவியின் மீது உள்ள பாசத்தால் அவரை வழியனுப்ப வந்ததும் தெரியவந்தது. இவர்  விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியை சேர்ந்தவர். கனடாவில் வேலைபார்த்து குடியுரிமையும் பெற்றுள்ளார்.