வடமாநில இளைஞர்களிடம் ஓடும் ரயிலில் வழிப்பறி; 17 வயது புள்ளிங்கோ கைது.!



Chennai 17 years old boy thieft police investigation

 

சென்னையில் உள்ள புறநகர் பகுதிகளை, நகரின் பல முக்கிய இடங்களுடன் இணைக்க மின்சார ரயில் சேவை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இருப்பினும் காலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்வார்கள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் கும்பல் வழிப்பறி போன்ற சம்பவங்களிலும் ஈடுபடுவது உண்டு. 

கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி பயணம் செய்த மின்சார ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கி ஒருவர் செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். 

இந்த விஷயம் தொடர்பாக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சர்ச்சை செயலில் ஈடுபட்டவர் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.