14 வயது சிறுமியுடன் 20 வயது இளைஞன் காதல்.. பெற்றோர் கண்டித்ததால் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. காதலி காலி., காதலன் உயிர் ஊசல்.!
14 வயது சிறுமியுடன் 20 வயது இளைஞன் காதல்.. பெற்றோர் கண்டித்ததால் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. காதலி காலி., காதலன் உயிர் ஊசல்.!

தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் பேசி வந்த நிலையில், நேற்று இருவரும் விபரீத முடிவெடுத்ததால் சிறுமி உயிரிழந்தார். 20 வயது இளைஞனின் உயிர் ஊசலாடுகிறது. மகள் படித்து நல்ல நிலைக்கு வருவாள் என காத்திருந்த வேளையில், அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய வைத்த காதல் என்ற வயதுகோளாறு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள மடிப்பாக்கம், நாவலர் தெருவில் வசித்து வருபவர் இளங்கோவன் (வயது 20). இவர் மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கும், உள்ளகரம் லேக் வியூ தெருவில் வசித்து வரும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் பள்ளியில் படித்து வருகிறார்.
சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தை இளங்கோவன் காதலாக மாற்ற, விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறியை பெற்றோர் கண்டித்து, இளங்கோவனுடன் பழக கொடுத்து என எச்சரித்துள்ளனர். ஆனாலும், காதல் ஜோடி பெற்றோரின் கண்களில் மண்ணைத்தூவி சந்தித்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் இரயில் தண்டவாளப்பகுதிக்கு வந்த காதல் ஜோடி, பரங்கிமலையில் இருந்து கிண்டி நோக்கி சென்ற மின்சார இரயில் மீது பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது. இந்த சம்பவத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த இரயில்வே காவல் துறையினர், இளங்கோவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.