9 வயது சிறுமியின் செயலைப் பாருங்கள் இப்படியும் செய்யலாமோ செம.!

9 வயது சிறுமியின் செயலைப் பாருங்கள் இப்படியும் செய்யலாமோ செம.!


chennai---police-station---9-years-old-child-help

சென்னையில் 9 வயது சிறுமி ஒருவர் தனது சார்பாக சில சிசிடிவி கேமராக்களை காவல் நிலையத்திற்கு அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ஸ்ரீ ஹிதா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஒருநாள் தனது தந்தையோடு அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த அலுவலகத்தின் அருகில் தமிழக காவல்துறையின் சிசிடிவி கேமரா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதுமுதல் தன் பெற்றோருடன் எங்கு சென்றாலும் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளதா என கவனித்துள்ளார். அப்படி இல்லாத இடங்களில் ஏன் இந்த இடங்களில் கேமரா இல்லை என்று தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்த அதிக செலவு ஆகும் என்பதால் முக்கியமான இடங்களில் மட்டுமே சிசிடிவி கேமரா பொருத்துவார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

Police station

இந்த நிலையில் சிறுமியின் பிறந்தநாள் நெருங்கியுள்ளது. அதனை சிறப்பாக கொண்டாட அவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தந்தையிடம்  சென்று அச்சிறுமி, அப்பா இந்த வருடம் எனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் அதற்கு உண்டான செலவுத் தொகையில் காவல் துறைக்கு நமது சார்பாக சிசிடிவி கேமரா வாங்கிக் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மிகவும் நெகிழ்ந்து போன அவரது தந்தை காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் 30 சிசிடிவி கேமராக்களை அளித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட அனைவரும் அந்த சிறுமியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.