தமிழகம்

ஓரினச் சேர்க்கைக்கு வர மறுத்ததால் மர்ம உறுப்பு துண்டிப்பு; வெளியான அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

chennai - mathavaram - rettary bridge - sad incident

சென்னை அடுத்துள்ள மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நேற்று மதுபோதையில் படுத்திருந்தார். அப்போது திடீரென அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அங்கு மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் நாராயணன் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நாராயணன் தெரிவித்தபோது ஓரினச்சேர்க்கைக்கு ஒருவர் என்னை அணுகினார். நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அவர் எனது மர்ம உறுப்பை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் படுத்திருந்த கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவர் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,

குடும்பத் தகராறு காரணமாக, தான் இது போன்று செய்து கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து அஸ்லம் பாஷாவின் மரணத்தை தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் அப்பகுதியில் அரங்கேறியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


Advertisement