திறந்திருந்த தண்ணீர் தொட்டியால் துயரம்.. அலட்சியத்தால் 2 வயது பச்சிளம் பிஞ்சு துள்ளத்துடிக்க பலி.!

திறந்திருந்த தண்ணீர் தொட்டியால் துயரம்.. அலட்சியத்தால் 2 வயது பச்சிளம் பிஞ்சு துள்ளத்துடிக்க பலி.!


Chengalpattu Guduvanchery Child Died Tank

2 வயது பச்சிளம் குழந்தை திறந்து கிடந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்ப்பக்கம், அய்யஞ்சேரியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ஷாலினி (வயது 2). குழந்தை ஷாலினி நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில், வாயில் பகுதியில் திறந்து இருந்த மழைநீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. 

குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனியார் மருத்துவமனையில் பதறியடித்து சிகிச்சைக்கு அனுமதிக்க, அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட பெற்றோர் கண்ணீருடன் குழந்தையை கட்டியணைத்து கதறியழுதனர்.

chennai

இந்த விஷயம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, மருத்துவமனைக்கு விரைந்த அதிகாரிகள் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.