ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்!! செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் திடீர் போராட்டம்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்!! செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் திடீர் போராட்டம்!


chengalpattu-corona-patient-dead-over-oxygen-demand

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பயங்கர வேகமாக பரவிவரும் நிலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 13 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் நோயாளிகள் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை எனவும், வேறுசில தொழில்நுட்ப காரணங்களால்தான் அவர்கள் உயிரிழந்ததாகவும் அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார்.

ஆனால், மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது எனவும், மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரியும், மருத்துவமனைக்கு உடனே தேவையான ஆக்சிஜன் வழங்ககோரியும் செங்கல்பட்டு மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.