அரசியல் தமிழகம் TN Election 2021

மாஸ் காட்டி வந்த குஸ்பு!! தேர்தல் நேரத்தில் அவருக்கு வந்த புதிய சிக்கல்..! காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

Summary:

தேர்தல் நெருக்கும் நேரத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு மீது இரண்டு பிரிவுகளின

தேர்தல் நெருக்கும் நேரத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் ஞாயிறு இரவு 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகை குஷ்பு. தனது வித்தியாசமான அணுகுமுறை, தனிப்பட்ட வாக்குறுதிகள் மூலம் தொகுதி மக்களிடையே அதிகம் பிரபலமாகிவிட்டார் குஸ்பு. அதிலும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துவரும் குஷ்பு அந்த பகுதி மக்களிடையே மிகவும் பரிட்சயம் ஆகிவிட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் வழிபாட்டுத்தலங்கள் முன்பாக பிரச்சாரம் செய்ய காவல்துறை உரிய அனுமதி தராதநிலையில், அனுமதி மீறி கோடம்பாக்கம் மசூதி அருகே பிரச்சாரம் செய்ததாக குஷ்பு மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் குஸ்பு மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது தொகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement