ஊரடங்கின்போது ஏற்பட்ட விபத்து! சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி பற்றி எரிந்த தீ.!

ஊரடங்கின்போது ஏற்பட்ட விபத்து! சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி பற்றி எரிந்த தீ.!


car lorry accident

சென்னை ஸ்ரீபெரும்புதுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது. சரியான நேரத்தில் தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் என்பவர் நேற்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர் குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேவலூர் குப்பம் சாலைக்கு செல்வதற்காக லாரியை டிரைவர் சாலையின் வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த பிரசாந்தின் கார் லாரி மீது பயங்கரமாக மோதியது.

accident 

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் புகுந்தது. காரின் கண்ணாடிகள் நொறுங்கின. கார் வேகமாக மோதியதால் காரின் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றி எரியதுவங்கியது. அதற்குள் காரும் லாரியின் முன்பகுதியும் எரிய துவங்கியது. 

லாரியில் 200க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து நடந்த உடன் சிலிண்டர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.