இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு கேப்டன் வெளியிட்ட அறிக்கை!! சல்யூட் அடித்த தமிழர்கள்!!

இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு கேப்டன் வெளியிட்ட அறிக்கை!! சல்யூட் அடித்த தமிழர்கள்!!


captain vijayakanth talk about indian army

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் புகுந்த இந்தியா ராணுவத்தின் போர்ப்படை விமானம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப்படைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்திய விமானப்படையை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

vijayakanth
அந்த அறிக்கையில், பாகிஸ்தான் நாட்டுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. மேலும், சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப் படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தே.மு.தி.க சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  நமது நாட்டைப் பாதுகாப்பதற்கு தன் உயிரைத் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இந்த பதிலடி தாக்குதல் மிகப்பெரிய ஒரு ஆறுதலாக இருக்கும். 

இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூப்பிக்கும் வண்ணம், அந்த பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் தே.மு.தி.க சார்பாக எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.