தமிழகம்

நிவர் புயல் எதிரொலி: இந்த 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்தம்.. அரசு நடவடிக்கை..

Summary:

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முன்னதாக நிவர் புயலின் போது அவசர உதவிக்காக அவசர கால உதவி எண்களை தமிழக அரசு அறிவித்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுவருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக நிவர் புயலின்போது கடும் தாக்கத்தை சந்திக்கும் முக்கியமான 7 மாவட்டங்களில் தற்போது பேருந்து போக்குவரத்துக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிருபதப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்தபிறகு புயலின் தாக்கம் குறித்த ஆய்வுக்கு பின்னரே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement