இனி இலவசம்.. அவர்களுக்கும் பேருந்துகளில் கட்டணம் கிடையாது! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

இனி இலவசம்.. அவர்களுக்கும் பேருந்துகளில் கட்டணம் கிடையாது! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!


bus-ticket-free-for-5-year-child

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு பெறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். அவர்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சென்னை மாநகர பேருந்துகள் பற்றிய விவரங்களை CHENNAI BUS என்ற செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பிற்கு அனைவர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.