வாகன சோதனையில் சிக்கிய பஸ் டிரைவர்.! விசாரணையில் வெளிவந்த உண்மை..!!Bus Driver arrested Under Drunk and Drive Act

"மது அருந்துவது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு" என்று எவ்வளவு சொல்லியும் இந்த தீய பழக்கத்திற்கு அடிமையாகி தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் குடித்துவிட்டு பேருந்தை இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பூரில் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு வழியே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றை கால்துறை அதிகாரி ஒருவன் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது அந்த பேருந்தை ஒட்டி வந்த டிரைவர் அனுமந்தல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி என்பது தெரியவந்தது. பேருந்தை நிறுத்திய டிரைவர் சின்னமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் டிரைவர் சின்னமணி மது அருந்திவிட்டு பஸ் ஓட்டிவந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் அந்த டிரைவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளார். பின்னர் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதுபோல் குடித்துவிட்டு பேருந்து ஓட்டுவது, பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.