தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
அதிகாலையில் பயங்கர விபத்து: சேலம் அருகே 30 அடி ஆழத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து

நேற்று இரவு பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றுக்கொண்டு கிளம்பியுள்ளது தனியார் பேருந்து. இன்று அதிகாலை சேலம் அருகே கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலை தடுமாறிய பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவர்களை இடித்துக்கொண்டு 30 அடி ஆழத்தில் கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 16க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இது குறித்து தகவலறிந்த சேலம் மாநகர போலிசார் 5 கிரேன்களின் உதவியுடன் பேருந்திணை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகினி நேரில் சென்று பார்வையிட்டார்.