மாணவி ஸ்ரீமதியின் உடலை புதைப்பதற்கு முன் உடலோடு சேர்த்து கட்டப்பட்ட பொருள்.! என்ன காரணம்.?

மாணவி ஸ்ரீமதியின் உடலை புதைப்பதற்கு முன் உடலோடு சேர்த்து கட்டப்பட்ட பொருள்.! என்ன காரணம்.?


buried-with-the-book-was-the-body-of-srimathi

கள்ளக்குறிச்சி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறி பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டதுடன் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஸ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதித்ததை அடுத்து இன்று காலை பெற்றோரிடம் ஸ்ரீமதி உடல் வழங்கப்பட்டது
இதனை அடுத்து ஸ்ரீமதியின் உடலுக்கு சடங்குகள் செய்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

srimathi

மாணவியின் உடல் புதைக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீமதிக்கு பிடித்தமான உயிரியல் பாட புத்தகத்தை உடல் மீது வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.