தமிழகம்

குடிப்பழக்கத்திற்கு அடிமையான அண்ணன்.! தங்கை என்று கூட பார்க்காமல் செய்த கொடூர செயல்..! புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இந்த தம

புதுக்கோட்டை மாவட்டம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியினரின் ஒரே மகள் லோகப்பிரியா. 20 வயது நிரம்பிய லோகப்பிரியா புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.  பழனியப்பன் மின்சார வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு அலுவலராக பணியாற்றி வந்தநிலையில், கடந்த 2013-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். கணவர் இறந்ததால் அவரது மனைவி சிவகாமிக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. 

இந்தநிலையில் சிவகாமி புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் வேலைக்கு சென்று வருகிறார். இதனையடுத்து லோகப்பிரியாவின் தாய் சிவகாமி நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது, கழுத்து அறுபட்ட நிலையில் லோகப்பிரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகாமி அலறல் சத்தம் போட்டுள்ளார்.லோகப்பிரியா கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 9 கிராம் தங்க நகை, வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம், வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டி ஆகியவை காணாமல் போயிருந்தது. 

பணம் நகைக்காக கொலை அரங்கேறி இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், லோகப்பிரியாவின் அண்ணனான அவரின் பெரியப்பா மகன் சுரேஷ் அவரை கொலை செய்தது தெரியவந்தது. பழனியப்பன் இறந்தபிறகு, ஆண் துணை இல்லாத அந்தக் குடும்பத்துக்கு சுரேஷ்தான் உடனிருந்து சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ், நிலையான வருமானம் தரும் வேலை எதற்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி பலரிடம் கடன் வாங்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரிக்கவே, என்ன செய்வது என யோசித்துள்ளார். எனவே பழனியப்பன் வீட்டில் நிறைய பணம், நகை இருக்கும் என எண்ணிய சுரேஷ், சித்திக்கும் தங்கைக்கும் உதவிகள் செய்வது போல அடிக்கடி வந்து வீட்டை நோட்டம் விட்டுச் சென்றுள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று சிவகாமி வேலைக்குச் சென்றிருந்ததை சாதகமாக்கி, லோகப்பிரியாவின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம், லோகப் பிரியா அணிந்திருந்த 9 கிராம் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியையும் சுரேஷ் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement