அண்ணனை வெட்டிக்கொன்ற ரவுடி,. 3 ஆண்டுகளாக பழிதீர்க்க காத்திருந்த தம்பி.. ஊர்மக்கள் மத்தியில் ஓடஓட விரட்டி கொலை செய்த கொடூரம்..!

அண்ணனை வெட்டிக்கொன்ற ரவுடி,. 3 ஆண்டுகளாக பழிதீர்க்க காத்திருந்த தம்பி.. ஊர்மக்கள் மத்தியில் ஓடஓட விரட்டி கொலை செய்த கொடூரம்..!


brother-killed-rowdy-in-thanjavur

அண்ணனை கொலை செய்த ரவுடியை தம்பி ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற சியாமளாதேவி கோவில் திருவிழாவில் மணி என்பவரை சுபாஷ் என்ற ரவுடி ஊர்மக்கள் மத்தியில் வெட்டி கொலை செய்துள்ளார். இதனால் சுபாஷை பழி தீர்க்க வேண்டும் என்று வெறியுடன் மணியின் தம்பி ஜோதிராஜன் காத்துக் கொண்டிருந்தார். 

thanjavur

தொடர்ந்து அதே கோவில் திருவிழாவில் மீண்டும் தகராறு செய்த சுபாஷை, கிடாவெட்டுக்காக அருகில் வைக்கப்பட்டிருந்த அருவாளை எடுத்து ஜோதிராஜன் மற்றும் அவரது மைத்துனர் சிவகுமார் இருவரும் சேர்ந்து ஊர்மக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடம் அறிவாளை ஒப்படைத்துவிட்டு, கொலையை ஒப்புக்கொண்டு இருவரும் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.