சொந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த திமுக நிர்வாகி!!
சொந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த திமுக நிர்வாகி!!

தூத்துக்குடியில், குடும்பத்தகராறில் தம்பியை அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த நபர் திமுகவில் பொறுப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் திமுகவில் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பில்லா ஜெகன். மேலும் இவர் லாரி தொழில் செய்துவருகிறார். இவரிடம் அவரது தம்பி சிம்சன் தொழிலில் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோவத்தின் உச்சத்திற்கு சென்ற பில்லா ஜெகன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சிம்சனை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிம்சன் உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார், சிம்சனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிம்சனை சுட்டுகொன்றுவிட்டு தப்பியோடிய பில்லா ஜெகனை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.