மாலைநேரத்தில் தங்கை வீட்டில் கேட்ட அந்த சத்தம்... ஆவேசத்தில் தங்கையின் கள்ளக்காதலனை தலையில் வெட்டிய அண்ணன்..! பகீர் சம்பவம்..!

மாலைநேரத்தில் தங்கை வீட்டில் கேட்ட அந்த சத்தம்... ஆவேசத்தில் தங்கையின் கள்ளக்காதலனை தலையில் வெட்டிய அண்ணன்..! பகீர் சம்பவம்..!


brother-attacked-a-man-for-his-sister

சென்னையில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியா. இவர் தனது கணவரை பிரிந்து, தந்தையின் வீட்டில் இரண்டு குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சேர்ந்த ராஜா என்பவருடன் இலக்கியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னாலில் கள்ளக்காதலாக மாறியதாக தெரியவருகிறது. 

இலக்கியாவின் பெரியம்மா மகனான அண்ணன் மதன் இந்த தகவலறிந்து இருவரையும் கண்டித்துள்ளார். இதன்பின் மாலை நேரத்தில் ராஜா, இலக்கியாவின் வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருக்கவே, இதனை கண்ட மதன் தட்டி கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவின் தலையை வெட்டியுள்ளார். 

sister

இதனை தடுத்த இலக்கியாவின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ராஜா மற்றும் இலக்கியாவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை சேர்த்துள்ளார். தற்போது அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக எர்ணாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.