5 பைசாவுக்கு பிரியாணி வழங்கிய ஓட்டல் உரிமையாளர்! அலைமோதிய மக்கள் கூட்டம்!

5 பைசாவுக்கு பிரியாணி வழங்கிய ஓட்டல் உரிமையாளர்! அலைமோதிய மக்கள் கூட்டம்!



briyani-for-5-paise

உணவு மற்றும் ஊட்டச்சத்து அத்தியாவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக். 16ம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,  பழங்கால பொருட்களை சேகரித்து, பாதுகாக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், திண்டுக்கல் பேரூந்து நிலையம் அருகே பிரியாணி கடையில் உணவு தினமான நேற்று அதிரடி சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டது. 

அதாவது, பழைய 5 பைசா கொண்டு வந்து கொடுத்தால் அவருக்கு ஒரு பிரியாணி இலவசம் என அந்த பிரியாணி கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமான் சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதில் பகல் 12 மணிக்கு பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று காலை முதலே பழைய ஐந்து பைசாவுடன் கடை முன்பு பொதுமக்கள் குவிய துவங்கினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பிரியாணி வாங்க வந்திருந்தனர். 

Biriyani

பின்னர் பகல் 12 மணிக்கு மேல் அனைவரிடமும், 5 பைசா நாணயத்தை வாங்கிக் கொண்டு பிரியாணி வழங்கப்பட்டது. முதலில் 100 பேருக்கு அறிவிக்கப்பட்ட பிரியாணி,  பின்னர் கூட்டத்தை கண்டதும் கூடுதலாக 50 பேருக்கு வழங்கப்பட்டது. 

இதுகுறித்து கடை உரிமையாளர் முஜிபுர்  ரகுமான் கூறுகையில், 'உணவின் மதிப்பையும், பழம்பொருட்களின் பெருமையையும் அனைவரும் உணர்ந்து கொள்வதற்காக இந்த திட்டத்தை அறிவித்ததாக தெரிவித்துள்ளார். இந்த 5 பைசாவுக்கு பிரியாணி கொடுத்த செய்தி சமூக வலைதளங்கள் பரவி வைரலாகி வருகிறது.