சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
புகுந்த வீட்டில் என்ட்ரி ஆகும்போதே இப்படியா!! சுத்தி நின்னவங்க ஒரு நிமிஷம் ஆடி போயிட்டாங்க..! வைரல் வீடியோ.
புகுந்த வீட்டில் என்ட்ரி ஆகும்போதே இப்படியா!! சுத்தி நின்னவங்க ஒரு நிமிஷம் ஆடி போயிட்டாங்க..! வைரல் வீடியோ.

புகுந்த வீட்டிற்கு வரும் மணமகள் அரிசி படியை எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவது வழக்கம். புதுமண தம்பதி பாலும் பழமும் சாப்பிடுவது, குத்து விளக்கு ஏற்றுவது, குடம் நிறைய நீர் எடுத்து வருவது, கையில் விளக்கேந்தி வருவது, குங்கும தண்ணீரில் கால் நனைத்து அடி எடுத்து வைப்பது இப்படி பலவிதமான சடங்குகள் செய்வது வழக்கம்.
இதில் பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படும் ஒன்றுதான் படியில் அரிசி வைத்து, அதனை மணமகள் எட்டி உதைவித்துவிட்டு வீட்டிற்குள் வருவது. அந்தவகையில், இந்த வீடியோ காட்சியில், புதிதாக திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வரும் மணமகள் ஒருவர், வீட்டின் வாசலில் அரிசியுடன் வைக்கப்பட்டிருந்த படியை கால்பந்தை எட்டி உதைப்பதுபோல் உதைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஒரு சம்பிரதாயத்துக்கு எட்டி உதைமானு சொன்னது ஒரு குத்தமா? அதற்காக இப்படியா உதைப்பது என நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துவருகின்றனர். அந்த காட்சியை நீங்களே பாருங்க..