கல்யாணமாகி 5 நாள்தான் ஆச்சு.. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கதறிதுடித்த புது மாப்பிள்ளை!!

கல்யாணமாகி 5 நாள்தான் ஆச்சு.. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கதறிதுடித்த புது மாப்பிள்ளை!!


bride-dead-after-5-days-of-marriage

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி நாளுக்கு நாள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற இளம்பெண்ணுக்கு தண்டூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்கள் உறவினர்கள் வீட்டிற்கும் அடிக்கடி விருந்துக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திருமணமாகி 5 நாட்களில் ஸ்ரீவானிக்கு திடீரென அடிக்கடி வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளார் என கூறியுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்திலேயே ஸ்ரீவானி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் புது மாப்பிள்ளை மற்றும் குடும்பமே கதறி அழுதனர்.

marriage

இந்த நிலையில் அவர் கொரோனாவால் இருந்திருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கூறி வந்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பெண்ணின் குடும்பத்தார்கள் தங்களின் மகள் தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பு ஏற்பட்டே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் திருமணமான ஐந்து நாட்களிலேயே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.