தமிழகம்

பட்டப்பகலில் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ்.! வைரலான வீடியோவால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை.!

Summary:

கோவையில் போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதள

கோவையில் போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் போலீசாக பணியாற்றி வருபவர் பாப்பாத்தி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், பெரிய கடைவீதி காவல் எல்லைக்கு உட்பட்ட டி.கே., மார்க்கெட் பகுதியில் பணியில் இருந்தபோது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டார். 

ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.  இதனை அந்த பகுதியில் நின்றிருந்த நபர் ஒருவர் மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கும் காட்சி மிக தெளிவாக பதிவாகி உள்ளது. பின்னர் அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது.

சமூக வலைத்தளங்களில் பலர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துகளை பதிவிட்டனர். இந்த காட்சிகள் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றன. விசாரணையில், அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பெண் போலீசை ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.


Advertisement