#| பரபரப்பு... ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அறிக்கை .!

#| பரபரப்பு... ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அறிக்கை .!



breaking-news-tamil-nadu-government-statement-canceling

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை  ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாநிலம் முழுவதிலும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என சற்று முன் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருவதால் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறையை ரத்து செய்து இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnaduஇந்த விடுமுறை இழப்பை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் 26 ஆம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது.

tamilnaduமகளிர் உதவித் தொகை வழங்குவதற்கான  பணிகள் மாநிலம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருவதால் இந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மகளிர்  உதவி தொகை காண விண்ணப்பங்கள் மற்றும்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெரும் பணிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.