கடன் வாங்கிய அண்ணன்.. கழிவறை சுத்தம் செய்து கொத்தடிமையாக வேலை பார்த்த 12 வயது தம்பி.. கண்கலங்கவைக்கும் சம்பவம்..

கடன் வாங்கிய அண்ணன்.. கழிவறை சுத்தம் செய்து கொத்தடிமையாக வேலை பார்த்த 12 வயது தம்பி.. கண்கலங்கவைக்கும் சம்பவம்..


Boy who lost his parents worked as mortgaging near Pudukkottai

அண்ணன் வாங்கிய கடனை அடக்கி அவரது தம்பி கொத்தடிமையாக வேலைபார்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் அவரது பெற்றோரை இழந்த நிலையில் தனது அண்ணன் -அண்ணியுடன் தங்கி வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் அண்ணன் சுப்பிரமணியும், அண்ணி மாரியம்மாளும் தனியார் குடியிருப்புகளில் கழிப்பிடம் சுத்தம் செய்யும் ஒப்பந்தக்காரர் சின்னராசு என்பவரிடம் 1 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையியல் வாங்கிய கடனை அடைக்கும்படி சின்னராசு சுப்ரமணியத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை. வாங்கிய கடனுக்கு பதிலாக தனது தம்பி வேலை செய்து அந்த கடனை அடைத்துவிடுவான் என கூறி, அந்த 12 வயது சிறுவனை சின்னராசிடம் கொத்தடிமையாக வேலைக்கு அனுப்பியுள்ளார்.

சிறுவனும் கடந்த மூன்று ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்து 1 லட்சம் கடனை அடைத்துவிட்டநிலையில், மேலும் 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடிமையாக வேலைபார்த்து வந்துள்ளான். மேலும் சிறுவனை அவர்கள் அடித்து, சித்ரவதை செய்து வேலை வாங்கிவந்த நிலையில், இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையியல், போலீசார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சொந்த அண்ணனே தனது தம்பியை கொத்தடிமையாக வேலைக்கு அனுப்பிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.