விநாயகரை அலங்கரிக்க போய், உயிரை விட்ட சிறுவன்... நல்லநாளில் ஏற்பட்ட பரிதாபம்.. கதறும் குடும்பம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சின்ன கருப்பன் என்ற 11 வயது சிறுவன் அருகில் இருக்கும் பள்ளியில் படித்து வந்துள்ளார். வார இறுதி விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபட சின்ன கருப்பன் நினைத்துள்ளார்.
எனவே விநாயகர் சிலைக்கு மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய நினைத்துள்ளார் சிறுவன் சின்ன கருப்பன். விநாயகர் சிலையை மின் விளக்குகளை வைத்து ஜொலிக்க வைக்க சீரியல் பல்பை கனெக்ட் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சின்ன கருப்பன் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்து விட்டான்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி இருக்கின்றன. தெரு மற்றும் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கும் போது இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதால் மற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டி அறிவுறுத்தப்படுகிறது. மேலும், விநாயகர் சிலைகளை கரைக்க நீர் நிலைகளுக்கு எடுத்துச் செல்லும் போது அதில் மூழ்கி சிலர் உயிரிழக்கக்கூடும் எனவே கவனமாக இருக்க வேண்டும்.