தாய்-தந்தைக்காக உயிரை விட்ட மகன்... உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை..!

12ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தற்கொலை குறிப்பை எழுதி வைத்து, தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சிங்களாந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் தருண் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக ரவி மற்றும் மேகலா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவர் தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அந்த குறிப்பில், "தனது இறப்பிலாவது தாய்-தந்தை இருவரும் ஒன்றாக சேர வேண்டும் எனவும், தனது அம்மா, அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் எழுதியுள்ளார்.
அத்துடன் 'நான் எங்கும் செல்லவில்லை, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்' என கடிதத்தில் உருக்கமாக எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.பின் காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்க்கும்போது தருண் தூக்கில் தொங்கியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கடிதம் மற்றும் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.
தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.