பெண்ணின் மார்பிங் புகைப்படத்தை வைத்து பணம் பறித்த மர்ம நபர்.. தேடுதல் வேட்டையில் போலீசார்.!Boy blackmail to women in Puduchery

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 31 வயது பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அந்த தகவலை அனுப்பிய மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். 

puduchery

அதன்படி உங்களுடைய புகைப்படம் ஒன்று என்னிடம் உள்ளது அதை நான் மார்பிங் செய்து உங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து விடுவேன் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அவருக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பயந்த அந்தப் பெண் அவர் கேட்ட பணத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். 

மேலும் இதனை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் அந்த இன்ஸ்டாகிராம் மூலமாக பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் தனது கணவருடன் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

puduchery

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டி பணம் பறித்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.