
Boy abused 10th std girl and two more college girls
இரண்டு கல்லூரி மாணவிகள் உட்பட 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரையும் இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோருடன் வந்த 10 ஆம் வகுப்பு மாணவி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அந்த மாணவி கூறியுள்ள புகாரின்படி, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்(26) என்ற இளைஞர் அந்த மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார்.
பழக்கம் நாளடைவில் காதலாக மாற, திருமணம் செய்துகொள்வதாக கார்த்திக் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் பலமுறை உல்லாசம் இருந்துள்ளார். மேலும், மாணவிக்கு தெரியாமல் அதை வீடியோ எடுத்துவைத்து மாணவியை மிரட்டிவந்துள்ளார்.
கார்த்தியின் கையில் வீடியோ இருப்பதால் அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், மனைவியை தனது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து அவர்கள் கூறுவதையும் கேட்கவேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.
மறுக்கவும் முடியாமல் வெளியே கூறவும் முடியாமல் மாணவி தவித்துவந்துள்ளார். நாளடைவில் மாணவியின் போக்கில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மாணவி புகார் கொடுத்த விவகாரம் வெளியேவரவே அந்த பகுதியை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் கார்த்திக் மீது அதே புகாரை கூற, போலீசார் அதிர்ச்சியாகியுள்ளனர். உடனே கார்த்திகை கைது செய்து அவரது தொலைபேசியை சோதனை செய்தபோது 10 ஆம் வகுப்பு மாணவி, 2 கல்லூரி மாணவிகள் தவிர மேலும் சில இளம் பெண்களின் வீடியோ போனில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கார்த்திகை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement