
Bonus for tasmak staff
தற்போதைய வாழ்க்கை முறையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களது வாழ்க்கையை சீரழித்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இளம் சிறுவர்கள் மது அருந்ததிய வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
நீண்ட நாட்களாகவே தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக பெண்களும், பல அரசியல் தலைவர்களும் போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மதுக் கடையை அரசாங்கமே நடத்தி வருகிறது. இதனால் தமிழகம்தோறும் நாளுக்கு நாள் மதுபான விற்பனை அதிகரித்துகொண்டே வருகிறது. மேலும் குடிமக்கள் மற்றும் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் டாஸ்மாக்கில் பணியாற்றும் சூப்பர் வைசர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவருக்கும் அரசாங்கமே சம்பளம் வழங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை விரைவில் வரவுள்ளதை முன்னிட்டு தமிழக அரசு, டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பொதுமக்கள் கடும் எரிச்சலில் உள்ளனர். 70 %க்கு மேலான டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 5 ருபாய் அதிகம் வைத்து விற்கின்றனர். இந்தநிலையில் போனஸ் அறிவித்தது மேலும் அவர்கள் செய்யும் செயலை ஊக்குவிப்பது போல உள்ளது என குமுறுகின்றனர் மது அருந்துபவர்கள்.
Advertisement
Advertisement