சென்னை கடலில் கரையொதுங்கும் நச்சுத்தன்மை கொண்ட நீல டிராகன்; புயலால் நடந்த சம்பவம்.!



Blue Sea Dragon Found Marina Sea Shore 

 

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையை புரட்டியெடுத்த மிக்ஜாங் புயலின் காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தின் பிடியில் சிக்கியது. வேளச்சேரி உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் பிரச்சனையை சந்தித்தனர். 

எண்ணூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கசிவு ஏற்பட்டு, எண்ணெய் கடல் நீருடன் கலந்ததால் அப்பகுதியை ஒட்டி வசித்து வந்த மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்தன. மேலும், அங்கு உயிர் வாழ்ந்த மீன்களின் நிலைமையும் கவலைக்கிடமாகி, அவை செத்தும் கடலில் ஒதுங்கின. 

இந்நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நீல நிறம் கொண்ட பட்டன்கள், கடல் டிராகன்கள் போன்றவை உயிரிழந்தும், உயிரோடும் கண்டறிவப்படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

ஆழமான நீர் கடல் பகுதிகளில் வாழும் இவை உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை கொண்டவை என்றும் கூறப்படுகிறது. தற்போது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அஸ்தலக்ஷ்மி கடற்கரை கோவில் பகுதியில் நீல நிற கடல் குதிரைகள் மற்றும் பட்டங்கள் எனப்படும் ஆழ்கடல்வாழ் உயிரினங்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. இவை குறித்து கடல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.