அடக்கொடுமையே... 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பாஜக நிர்வாகி போக்சோவில் கைது.!!

அடக்கொடுமையே... 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பாஜக நிர்வாகி போக்சோவில் கைது.!!


bjp-state-financer-arrested-under-pocso-for-sexually-as

15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச உரையாடல்களையும் அருவருக்கத்தக்க படங்களையும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி எம்.எஸ் ஷா அனுப்பி வைப்பதாக சிறுமியின் தந்தை மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தனது மகளிடம் விசாரித்த போது சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.

maduraiமேலும் தனது ஆசைப்படி நடந்து கொண்டால் பைக் வாங்கித் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்  எம்.எஸ் ஷா. மேலும் இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை குற்றம் சாட்டியிருக்கிறார். தனது மனைவியின் கடனை அடைப்பதாக ஏமாற்றி மனைவியுடனும் எம்.எஸ்.ஷா தகாத உறவில் இருந்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார் மேலும் பலமுறை சிறுமியின் தாயார் அந்தக் குழந்தையை வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்திருக்கிறது.

maduraiஇது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் காவல்துறை கண்டு கொள்ளாத நிலையில் நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ் ஷா மற்றும் சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.