பாஜக தேசிய தலைவர் வானதி சீனிவாசன் திமுகவில் இணைகிறார்.... சவுக்கு சங்கர் ட்விட்டர் பதிவால் பரபரப்பு ...!!



BJP national president Vanathi Srinivasan joins DMK.... Chavku Shankar's Twitter post sparks a stir...!!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குறை கூறி வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிரணி தலைவராகவும், கோவை தெற்கு தொகுதி எம்.எல.ஏவாகவும் பதவி வகித்து வரும் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய இரும்பதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அவரது டுட்டர் பக்கத்தில், வானதி சீனிவாசனை கட்சி தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். வானதி சீனிவாசனை திமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசி வருகிறார் என்றும், இந்த முயற்சி ஒத்துவந்தால், வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வானதி சீனிவாசனுக்கு‌ நிச்சயம் இடம் உண்டு என்றும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது கணவர் சு.சீனிவாசன் அண்மையில் விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், வானதி சீனிவாசன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது கோபத்தில் இருப்பதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிர் தலைவராக உள்ளார். மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வலது கரமாகவும் இருந்து வருகிறார்.  எனவே அவர் திமுகவில் இணைவது சாத்தியமில்லாத விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால், வானதி சீனிவாசன் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பு செய்தியும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.