"ஆசையா கூப்டா வரமாட்டியா..." மது போதையில் ரகளை செய்த பாஜக நிர்வாகி.!! கத்தியால் குத்திய கள்ளக்காதலி.!!



bjp-leader-stabbed-by-lover-shocking-incident-in-chenna

தனியார் நிறுவன ஊழியருடன் கள்ளத்தொடர்பிலிருந்த பாஜக நிர்வாகி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக துணை தலைவராக பதவி வகித்து வருபவர் சுரேந்தர். சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. பிரியதர்ஷினியின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பயன்படுத்தி பிரியதர்ஷினிக்கு பண உதவி செய்து அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார் சுரேந்தர்.

tamilnadu

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு பணம் கொடுத்திருக்கிறார் சுரேந்தர். இதனைத் தொடர்ந்து அவரை உல்லாசமாக இருப்பதற்கு அழைத்திருக்கிறார். அதற்கு சம்மதித்த பிரியதர்ஷினி தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டில் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர் சாலிகிராமத்திலுள்ள பிரியதர்ஷினி வீட்டிற்கு மது போதையில் சென்று தகராறு செய்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்ற சுரேந்தர் உனக்கு காசு வேண்டும் ஆனால் ஆசையாக அழைத்தால் வரமாட்டியா.? என தகாத வார்த்தைகளால் பிரியதர்ஷினியை அவரது கணவர் மற்றும் மகன் முன்பு திட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "காசு தரலன்னா, போட்டோ ரிலீஸ்.." இன்ஸ்டா நட்பால் இளம் பெண்ணுக்கு வந்த வினை.!! தந்தை, மகன் கைது.!!

இதனால் ஆத்திரமடைந்த பிரியதர்ஷினி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சுரேந்தரை குத்தி இருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுரேந்தர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் 31 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் சுரேந்தரை கத்தியால் குத்திய பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாலிகிராமம் பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "பஸ் பயணத்தில் கள்ளக்காதல்..." வீடியோ எடுத்து மிரட்டிய கண்டக்டர்.!! போலீஸ் நடவடிக்கை.!!