அரசியல் தமிழகம்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்! தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

Summary:

bjp leader L murugam urges to cancel epass

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அரசின் அனுமதி பெற்று பயணிக்கும் வகையிலான இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. வேலை, தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்குள்ளேயோ, வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்குக் கூட இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால்  இ-பாஸ் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக பொதுமக்கள் பெறும் பாதிப்புக்கு உள்ளாவதால், இதனை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் முறை கிடையாது. எனவே, மக்கள் படும் சிரமத்தைக் கருதி, தமிழ்நாடு அரசு, தமிழகத்திலும் இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement