அரசியல் தமிழகம் TN Election 2021

சிறுமி கேட்ட ஒத்த வார்த்தை!! பரபரப்பான தேர்தல் நேரத்திலும் அண்ணாமலை செய்த நெகிழ்ச்சி காரியம்!!

Summary:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை செய்துள்ள காரியம் நெகிழ்ச்சியை ஏற்படு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை செய்துள்ள காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரவிற்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரியான திரு. அண்ணாமலை அவர்கள். தொகுதியின் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அண்ணாமலை சமீபத்தில் கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட  வேட்டமங்கள் காலணியில் வாக்கு சேகரிக்க சென்றிருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அந்த பகுதியில், பாலுசாமி என்பரின் மகள் கார்த்திகா என்ற சிறுமி, வாக்கு சேகரிக்க சென்ற அண்ணாமலையிடம் "நீங்கள்ளாம் எங்க வீட்டில் வந்து தங்குவிங்களா" என எதார்த்தமாக கேட்டுள்ளார். ஆனால் சிறுமி கேட்டதிற்கு பின்னால் உள்ள ஆழமான அர்த்தத்தை புரிந்துகொண்ட அண்ணாமலை அந்த சிறுமியின் வீட்டில் தங்குவதென முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த அண்ணாமலை, நேற்றிரவு 11.30 மணியளவில் சிறுமி கார்த்திகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அண்ணாமலை சிறுமியின் வீட்டிற்கு வரும் தகவல் கிடைத்ததும், அந்த பகுதி மக்கள் சிறுமியின் வீட்டு முன் குவிய தொடங்கிவிட்டனர். பின்னர் அங்கு வந்த அண்ணாமலைக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சிறுமியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவான பூரியை சாப்பிட்டுவிட்டு, அங்கையே உறங்கியுள்ளார் அண்ணாமலை. பின்னர் அடுத்தநாள் காலை எழுந்து, அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அண்ணாமலை, தேர்தலில் தான் வெற்றி பெற்றதும் அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதாக வாக்குறித்து அளித்துள்ளார்.

மேலும் சிறுமியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டீயை அருந்திவிட்டு அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். சிறுமி கேட்ட ஒற்றை கேள்விக்காக, பரப்பரான தேர்தல் நேரத்திலும் அண்ணாமலை செய்த செயல், அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement