
biometric attendance stopped in school
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டியுள்ளது. இதனிடையே கொரோனா குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டிய நிலை இல்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவை நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் இருந்து தமிழக ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement