
சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற நபர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு
சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற நபர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு முத்துக்குமார் பணி முடிந்து நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் வந்துகொண்டிருந்துள்ளார்.
அப்போது முத்துக்குமார் லேசான தூக்க கலக்கத்தில் இருந்ததால் திடீரென அவர் சென்ற வாகனம் மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. வாகனம் மோதியதில் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் முத்துக்குமார்.
இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement