நான் இருக்குற வேதனையில் நீ இப்படி பண்றியே...! கணவனுக்கு மனைவியால் நள்ளிரவில் நடந்த பயங்கரம்... திடுக்கிடும் பின்னணி..!!



bengaluru-wife-arrested-husband-murder

பெங்களூருவில் குழந்தை இல்லாதது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்துள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, மனைவி கத்தியால் குத்தியதில் 44 வயதான ராஜசேகர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை இல்லாததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு

பெங்களூருவைச் சேர்ந்த ராஜசேகர் (44), மாலாஸ்ரீ (35) ஆகியோருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லாததால் இருவரும் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பட்...! மாதம் ரூ.1000 உதவித்தொகை... முழு விவரம் இதோ..!!!

மதுபோதையில் வந்த கணவருடன் வாக்குவாதம்

கடந்த நவம்பர் 11-ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜசேகருக்கும் மாலாஸ்ரீக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மாலாஸ்ரீ சமையலறையில் இருந்த கத்தியால் ராஜசேகரின் மார்பில் குத்தியுள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜசேகர்

கத்திக்குத்தில் படுகாயமடைந்த ராஜசேகர் உடனடியாக விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: பாதிலேயே முடிந்த வாழ்க்கை! அதிவேகமாக சென்ற வாகனம்! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி... பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!